Asianet News TamilAsianet News Tamil

கூட்டணியில் இழுபறி.! 12 மக்களவை தொகுதி, 1 ராஜ்ய சபா சீட் கேட்கும் பாமக.? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், பாமகவை தங்கள் அணிக்கு இழுக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 12 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டும் என பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

PMK demand for 12 Lok Sabha constituencies has caused a setback in the BJP alliance KAK
Author
First Published Feb 6, 2024, 11:38 AM IST

அதிமுக- பாஜக கூட்டணி

நாடாளுமன்ற தேர்தல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அதன் படி பாக முகவர்கள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலை மாநில தலைமையிடம் தேசிய தலைமை கேட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி தமிழகத்தில் பிரிந்துள்ள நிலையில், இரு தரப்பும் மிகப்பெரிய மற்றும் வலுவான கூட்டணியை அமைக்க திட்டம் தீட்டி வருகிறது,

PMK demand for 12 Lok Sabha constituencies has caused a setback in the BJP alliance KAK

11 மக்களவை தொகுதி கேட்கும் பாஜக

இதற்காக வட மற்றும் தென் மாவட்டங்களில் வலுவாக உள்ள பாமக, தேமுதிகவிடம் இரு தரப்பும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் பாஜக தனது அணிக்கு பாமகவை இழுக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதனையடுத்து பாமக விருப்பம் என்ன என பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. அதன் படி தமிழகத்தில் 11 மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் இதற்கு பாஜக 7 தொகுதிகளை தருவதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவும் பாமகவிற்று 6 முதல் 7 தொகுதிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளாதக தெரிகிறது. எனவே பாமக எந்த பக்கம் செல்லும் என ஓரிரு தினங்களில் தெரியவரும்  என கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ADMK vs PMK : ராமதாஸை வீடு தேடி சென்று சந்தித்த சி.வி.சண்முகம்.. அதிமுக கூட்டணிக்கு அழைப்பா.? காரணம் என்ன.?

Follow Us:
Download App:
  • android
  • ios