ஸ்வராஜ் ஒரு முக்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகக் கருதப்படுகிறார். அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றினார்.பின்னர் மிசோரம் ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநர் பதவியை மிக இளம் வயதில் வகித்த பெருமைக்குரியவர் ஸ்வராஜ் கௌஷல்.

முன்னாள் மிசோரம் ஆளுநரும், மூத்த வழக்கறிஞருமான டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜின் தந்தை ஸ்வராஜ் கௌஷல் இன்று காலமானார். அவருக்கு 73 வயது. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் ஜூலை 12, 1952 அன்று இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் பிறந்தார். மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் கணவரும், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அவரது திடீர் மறைவு அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வராஜ் கௌஷல் பிரபலமான வழக்கறிஞர். மிசோரம் ஆளுநராகவும் பணியாற்றினார். டெல்லி பாஜக தனது எக்ஸ்தளப்பதிவில் ஸ்வராஜ் கௌஷலின் மறைவை அறிவித்தது. டிசம்பர் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு லோதி சாலை தகன மேடையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், டெல்லி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஆவார். அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அவரது வீட்டில் கூடியுள்ளனர்.

பன்சூரி தனது மரணம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ "பாப்பா ஸ்வராஜ் கௌஷல் ஜி, உங்கள் பாசம், உங்கள் ஒழுக்கம், உங்கள் எளிமை, உங்கள் தேசபக்தி மற்றும் உங்கள் அபரிமிதமான பொறுமை ஆகியவை என் வாழ்க்கையின் ஒளி, அவை ஒருபோதும் மங்காது. உங்கள் மறைவு என் இதயத்திற்கு ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நீங்கள் இப்போது உங்கள் தாயுடன், கடவுளின் முன்னிலையில், நித்திய அமைதியுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை என் மனம் உறுதியாகப் பற்றிக் கொண்டுள்ளது. உங்கள் மகளாக இருப்பது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை. உங்கள் மரபு, உங்கள் மதிப்புகள், உங்கள் ஆசீர்வாதங்கள் நான் தொடரும் ஒவ்வொரு பயணத்திற்கும் அடித்தளமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வராஜ் கௌஷல் டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஸ்வராஜ் ஒரு முக்கிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகக் கருதப்படுகிறார். அவர் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றினார்.பின்னர் மிசோரம் ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநர் பதவியை மிக இளம் வயதில் வகித்த பெருமைக்குரியவர் ஸ்வராஜ் கௌஷல்.

ஸ்வராஜ் கௌஷல் 1975-ல் சுஷ்மா ஸ்வராஜை மணந்தார். அவரது மனைவி சுஷ்மா ஸ்வராஜ், பாஜகவில் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். 2014-ல், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றினார். சுஷ்மா ஸ்வராஜ் ஆகஸ்ட் 2019-=ல் காலமானார். அவர் டெல்லியின் முதல்வராகவும் பணியாற்றினார்.