- Home
- Politics
- தமிழக வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் 40 -50 லட்சம் பேர்..! உங்கள் பெயரை தெரிந்து கொள்வது எப்படி..?
தமிழக வாக்காளர் பட்டியலில் நீக்கப்படும் 40 -50 லட்சம் பேர்..! உங்கள் பெயரை தெரிந்து கொள்வது எப்படி..?
தற்போது தமிழ்நாட்டில் 6.41 கோடி மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர் 28, 2025 முதல் பிப்ரவரி 7, 2026 வரை 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளனர்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணி தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. நவம்பர் 29, 2025 வரையில் 58.9 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 97.25 சதவிகிதம் எஸ்.ஐ.ஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பு முழுமையானால், இது 50 லட்சத்திற்கும் மேல் இந்த எண்ணிக்கை உயரலாம். இதில்,இறந்தவர்கள்: 23.83 லட்சம் பேர். இடம்பெயர்ந்தவர்கள் 27.10 லட்சம் பேர். கண்டுபிடிக்கப்படாதவர்கள் 5.19 லட்சம் பேர் இடம்பெறலாம்.
தற்போது தமிழ்நாட்டில் 6.41 கோடி மொத்த வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர் 28, 2025 முதல் பிப்ரவரி 7, 2026 வரை 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 1 கோடி பெயர்கள் நீக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார். பீகார் போன்ற மாநிலங்களில் 43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதை உதாரணமாகக் கூறி, இது தவறான நீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார். கூட்டணி கட்சிகள் இதைப் பாராளுமன்றத்தில் விவாதிக்கவுள்ளன.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை இலவசமாகச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ இணையதளமான elections.tn.gov.in அல்லது voters.eci.gov.in செல்லவும். "Search by Name" அல்லது "Electoral Roll Search" எனத் தேர்ந்தெடுக்கவும். பெயர், தந்தை/தாய் பெயர், வயது, மாவட்டம், தொகுதி, வாக்குப்பதிவு மையம் ஆகியவற்றை உள்ளிடவும். உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை EPIC எண் இருந்தால், அதனை உள்ளிட்டு விரைவாகச் சரிபார்க்கலாம்.
பெயர் இல்லையெனில், ஃபார்ம் 6 ஐ நிரப்பி புதிதாகப் பதிவு செய்யவும். ஆதார், பிறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் தேவை. BLO பூத் லெவல் அதிகாரி அல்லது தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஏன் இந்த நீக்கம் என்றால் போலி வாக்குகளைத் தடுப்பதே நோக்கம். தவறான நீக்கம் நடந்தால், முறையீடு செய்யலாம். 2024 மக்களவை தேர்தலின்போது கோயம்புத்தூரில் 1 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டபோது விமர்சனங்கள் எழுந்தன.
