திமுகவினர் இனி வீடு வீடாக சென்று தங்கத்தை கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் - செல்லூர் ராஜூ
திமுகவினர் வீடு வீடாக சென்று தங்கத்தை கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் 52வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இருக்கக்கூடிய மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட அதிமுக கொடியை ஏற்றி கட்சி தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து மதுரை கேகே நகர் பகுதியில் இருக்கக்கூடிய எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருடைய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்ஜிஆர் குறித்து அன்றைக்கு ஒவ்வொருவரும் எள்ளி நகையாடிய நிலையில் அவற்றையெல்லாம் தாண்டி தற்போது 50 ஆண்டுகளில் கடந்து 52வது ஆண்டில் அதிமுக பயணிக்கிறது.
நாமக்கல்லில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பிய நபர்
ஏழை எளிய மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டு வந்தது அதிமுக. தொண்டர்கள் ஒன்றுபட்டு வாழ்வோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடியார் கரத்தில் ஒப்படைப்போம் என்றார். அனைத்து குடும்பத்தினருக்கும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல கலைஞர் அனைத்து மக்களுக்கும் தொலைக்காட்சி கொடுத்தார். அதேபோன்று ஜெயலலிதா அவர்கள் சொன்னது போல அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆபத்தை உணராமல் பேருந்தின் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்
அரசு கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தது அதிமுக கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள ஏழை எளிய மக்கள் உணவருந்த கூடிய வகையில் விலையில்லா அரிசியை கொடுத்தது அதிமுக. திமுக அரசு வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமம் தொகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், என்ன தான் திமுக ஆட்சியில் வீடு வீடாக தங்கத்தை கொடுத்தாலும் தமிழக மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்றார்.