பிரதமர் மோடி தமிழ் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் விமர்சிக்கிறார் - செல்லூர் ராஜூ கருத்து
பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருக்காது எனவும், பிரதமர் மோடி தமிழ் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அதிமுக மாநாடு அழைப்பிதழை விநியோகித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது எந்த பிரதமராவது தமிழை பற்றி பேசி உள்ளனரா? மோடி ஜி மட்டும் தான் தமிழ் மொழி, கலாசார சிறப்பை பற்றி ஐநா சபை வரை பேசியவர். மோடி ஜி தமிழ் பேசுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் விமர்சிக்கிறார். அமலாக்கத்துறை நெருக்கடி காரணமாகவே முதலமைச்சர் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்"
பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, "தான்தோன்றி பிறரை நம்பாது என்பார்கள். தன்னை போலவே பிறரையும் நினைக்கிறார் ஸ்டாலின். கடைசி வரை வாஜ்பாய் காலை பிடித்துக்கொண்டே முரசொலி மாறனை மந்திரி பதவியில் நீடிக்க வைத்தார். அதுபோல் நாங்கள் இருக்க மாட்டோம். தோழமை உணர்வுடன் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம்" என்றார்.
செல்போன் கோபுர உச்சியில் ஏறி காரியத்தை சாதித்த வாலிபர்; திருமணத்திற்கு சம்மதம் சொன்ன காதலி
"அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் வாங்கிய கடன் 5.5 லட்சம் கோடி. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் 2 லட்சம் கோடி வாங்கி உள்ளனர். தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட வளர்ச்சி பணி செய்து கடன் வாங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் இதுபோல் எதுவும் செய்யாமல், கலைஞர் நூலகம், கலைஞர் கோட்டம், பேனா சின்னம் தான் கட்டினர். பி.டி.ஆர். பாவம் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். அவர் பல்லை தான் பிடுங்கி விட்டார்களே. அவருக்கு நிதி ஆளுமை தெரியவில்லை போ என்று ஒதுக்கி விட்டார்கள்".
அன்னிய செலாவணி வழக்கு; டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை
ராகுல்காந்தியை கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. சாட்சாத் ஸ்டாலின் கூட ராகுலை பிரதமர் வேட்பாளர் என சொல்ல முடியவில்லை. ஆனால் மோடியை அடுத்த பிரதமர் என நாங்கள் சொல்கிறோம். இந்த ஒற்றுமையே போதும் மோடி மீண்டும் பிரதமாராவர்" என்றார்