Asianet News TamilAsianet News Tamil

அன்னிய செலாவணி வழக்கு; டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை

அன்னிய செலாவணி மோடி வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளலாக தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

ed action to declare ttv dhinakaran insolvent senior advocate informs chennai high court
Author
First Published Aug 12, 2023, 10:22 AM IST

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து மத்திய அமலாக்கத்துறை இயக்குநர் கடந்த 1998ம் ஆண்டு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து டிடிவி தினகரன் அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கும் 2017ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் ரூ.31 கோடி அபராதத் தொகையை அவர் தற்போது வரை செலுத்தவில்லை. மேலும் அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

அமைச்சர் சொல்லி தான் கூடுதலா பணம் வாங்றோம்; டாஸ்மாக் ஊழியரின் பேச்சால் பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், அபராதத் தொகையை வசூலிக்க அமலாக்கத்துறை இயக்குநர் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதனை எதிர்த்து டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் டிடிவி தினகரனை திவாலானவர் என்று அறிவிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கை நிலுவையில் இருந்து வருவதாக டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர் வழக்கை முத்து வைப்பதாக உத்தரவிட்டார்.

மது அருந்துவதில் தகராறு; பெயிண்டர் வீடு புகுந்து வெட்டி கொலை - கொலையாளி போலீசில் சரண்

Follow Us:
Download App:
  • android
  • ios