செல்போன் கோபுர உச்சியில் ஏறி காரியத்தை சாதித்த வாலிபர்; திருமணத்திற்கு சம்மதம் சொன்ன காதலி
திருச்சி அருகே காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தின் ஏறி மிரட்டல் விட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள நாகமங்கலம், நாராயணபுரத்தை சோந்த கட்டடத் தொழிலாளி தினேஷ் (வயது 22). இவா் அதே பகுதியைச் சோந்த 17வயது சிறுமியை காதல் திருமணம் செய்ய 2022, ஜூலை 17ஆம் தேதி அழைத்து சென்றுள்ளார். 18 வயது பூர்த்தி அடையவில்லை என்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிறுமியை மீட்ட காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தில் தினேஷை கைது செய்து சிறையிலடைத்தனா்.
சிறையிலிருந்து வந்த அவா், காதலித்த பெண்ணுடன் தொடா்பை புதுப்பித்து கொண்டாா். இதையடுத்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனா். இந்நிலையில், அந்த போக்ஸோ வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக தினேஷுக்கும் அப்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டு, பெண் கோபித்து கொண்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
அன்னிய செலாவணி வழக்கு; டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை
இதனால் மனமுடைந்த தினேஷ் நாகமங்கலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, காதலித்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லாவிட்டால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளாா். தகவலறிந்து வந்த மணிகண்டம் காவல் துறையினர், தினேஷுடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அமைச்சர் சொல்லி தான் கூடுதலா பணம் வாங்றோம்; டாஸ்மாக் ஊழியரின் பேச்சால் பரபரப்பு
இதையடுத்து, அந்தப் பெண்ணையே திருமணம் செய்துவைப்பதாக இருவீட்டாரும் உறுதி அளித்தனா். பின்னா் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் தினேஷ் கீழே இறங்கி வந்தாா். சுமாா் 5 மணி நேரம் செல்போன் கோபுர உச்சியில் நின்றதால், உடல்நிலை பாதிக்கப்பட்ட அவா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.