எத்தனை காசிக்கு சென்றாலும் அதிமுக அலுவலகத்தை துவம்சம் செய்த பாவம் தீராது..! ஓபிஎஸ்யை சீண்டும் ஆர்.பி உதயகுமார்
அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்ட உங்கள் விட்டிற்கு ஏன் சோதனை நடத்த வரவில்லை, இப்போது மட்டும் அரசு அவர்களின் கடமையை செய்ய தயங்குவது ஏன்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
காசிக்கு சென்றாலும் ஓபிஎஸ் பாவம் தீராது
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாயமாகி வருகின்றனர், நாளைய தினமே உசிலம்பட்டியில் இடைத்தேர்தல் வந்தாலும் இரட்டை இலை தான் வெற்றி பெறும், இங்கு வெற்றி பெற்ற அய்யப்பன் தகுதி நீக்கம் செய்யப்படுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொண்டர்களின் போர்வையில் குண்டர்களை கூட்டிக்கொண்டு அதிமுக அலுவலகத்தை தும்சம் செய்த பன்னீர்செல்வம் எத்தனை காசிக்கு சென்றாலும் பாவம் தீராது., தொண்டர்கள் யார் பக்கம் என்று அவருக்கு தெரியும்,
ஆ.ராசாவுக்கு எதிராக ஒருபோதும் போராட்டம் நடத்த மாட்டோம்.. பிளான் வேற.. உறுதியாக சொன்ன அண்ணாமலை.
ஓபிஎஸ் வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்..?
அதிமுக - முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை குறித்து கேட்டதற்கு அவர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கட்டும் என்று சொன்ன பன்னீர் செல்லம் அவர்கள், அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டத்திற்கும் நிதியமைச்சராக இருந்து ஒப்புதல் அளித்து கையொப்பம் இட்ட உங்கள் விட்டிற்கு ஏன் சோதனை நடத்த வரவில்லை, இப்போது மட்டும் அரசு அவர்களின் கடமையை செய்ய தயங்குவது ஏன்? உங்கள் வீட்டில் அல்லவா சோதனை நடைபெற்று இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது எனவும், விரப்பனையே சுட்டு வீழ்த்திய ஸ்காட்லாந்திற்கு இணையான பேசப்பட்ட தமிழக காவல் துறை இன்று என்ன செய்கிறது என தெரியவில்லை தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்து வருகிறது எனவும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக செயல்படுகிறது.,
சனாதன வெறியில் வன்முறையை தூண்டும் பாஜக.. ஆ.ராசாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கே.பாலகிருஷ்ணன்..!
ஆ.ராசா பேச்சு திசை திருப்பும் நடவடிக்கை
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்கள் அனைத்திற்கும் சங்கு ஊதி விட்டனர் என விமர்சித்தார். எழுதாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்கும் திமுக அரசு முதியோர் ஓய்வூதியத்தை ரத்து செய்ததால் வயதான தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் நிலையில் ஆ.ராஜா - இந்துகள் குறித்து அவதூறாக பேசியது தற்போது மக்களை திசை திருப்பும் வண்ணம் உள்ளது என பேசிய ஆர்.பி.உதயக்குமார், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ராஜாவிற்கு தைரியம் கொடுத்தது யார் என தெரியவில்லை, இது - ஆண்டிமுத்து ராசாவின் கருத்தா? இல்லை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கருத்தா? என தெரியவில்லை என சாடினார்.
இதையும் படியுங்கள்
அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ்.. சமாளிக்க முடியாமல் திணறும் ஓபிஎஸ்.. என்ன செய்யப்போகிறார்?