அடுத்தடுத்து அதிரடி காட்டும் இபிஎஸ்.. சமாளிக்க முடியாமல் திணறும் ஓபிஎஸ்.. என்ன செய்யப்போகிறார்?
அதிமுகவின் 11.7.2022 அன்று இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை, குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி, இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிளிப்பிள்ளை சொல்வதை போல நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார் என மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: அதிமுகவின் 11.7.2022 அன்று இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தங்களை, குறிப்பாக பொதுச் செயலாளர் பதவி, இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்குவது, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க;- “டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு
அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் 13.7.2022 அன்று ஒப்படைத்திருந்தோம். அத்துடன் சேர்த்து 2,532 பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்திருந்தோம். இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது. மேலும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என கூறியுள்ளது.
அந்த தீர்ப்பின் நகலையும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்கின்ற 2500-க்கும் கழக பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் இன்று ஒப்படைத்துள்ளோம். விரைந்து இதன்மீது நடவடிக்கை எடுத்து, அந்த தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்று அதை தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயல். ஆனால் ஓபிஎஸ் இப்படி செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏற்கனவே அடியாட்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியவர். இதுகுறித்து நீதிமன்ற வழக்குகள் முடிந்த பின்னர், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நான் தான் உண்மையான அதிமுக. பொதுக்குழு உறுப்பினர்கள் என் பின்னால் தான் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையதத்தில் இதுவரை ஓபிஎஸ் கடிதம் கொடுக்கவில்லை. கிளிப்பிள்ளை சொல்வதை போல நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுவிட்டது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் இருந்து வருகின்றனர்.
மேலும் படிக்க;- எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!