நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல்...! திமுகவை அலறவிடும் அதிமுக மாஜி அமைச்சர்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீடிற்கு எடுத்துக்காட்டு மற்றும் சான்றாக உள்ளதென்றும், இலங்கையில் நடந்த கலவரம் போல் இங்கேயும் கலவரம் நடந்திருப்பது வெட்கக்கேடாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளத. இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையும் ,நாடாளுமன்ற தேர்தலையும் தனித்தனியாக நடத்துவதன் மூலம் பல ஆயிரம் கோடி அளவிற்கு கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான ஓ.எஸ் மணியன் 2024 ஆம் ஆண்டு சட்மன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம்..யாருக்கு என்ன லாபம்? திமுகவை கண்டித்த விஜயகாந்த்
'போதைபெபொருள் சந்தை தமிழகம்'
இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை எப்படி ரத்து செய்வது, ஒடுக்குவது என்று யோசிக்கும் அரசாக திமுக உள்ளதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வகையில், ஒரேநாடு, ஓரேதேர்தல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். எனவே 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் , தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக தெரிவித்தவர், போதை பொருளின் வர்த்தக சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாக போதைப் பொருள் கிடைப்பதாக குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்