ஆற்காடு வீராசாமி கூறியது போல் சொல்லக்கூடிய சூழ்நிலை செந்தில் பாலாஜிக்கு விரைவில் வரும்.. கடம்பூர் ராஜூ ..!
அதிமுக எம்.பி.யை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது என கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக எம்.பி.யை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது என கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ;- திமுக ஆட்சி போனால் அதற்கு முழு காரணம் நான் தான் என்று ஆற்காடு வீராசாமி கூறியது போல் சொல்லக்கூடிய சூழ்நிலை செந்தில் பாலாஜிக்கு விரைவில் வரும். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளதாக குற்றம்சாட்டினார். சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா? மின்சார கட்டண உயர்வால் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிச்சாமி பதவியே செல்லாது.. மகனை காக்க மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம்!
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் எப்படி ஆர்வமுடன் இணைந்தார்களோ, அதே போன்ற எழுச்சியை இப்போது பார்க்க முடிகிறது. இதுதான் யதார்த்த நிலை. பொதுக்குழு உறுப்பினர்களின் 48 பேரை தவிர 2,532 பேர் ஒருமனதாக கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தான் நீதிமன்றமும் தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள ஆதரவை பார்த்து தான் அதிமுக தலைமை அலுவலக சாவியை நீதிமன்றமே ஒப்படைத்துள்ளது. வங்கிகளும், எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
எங்களை பற்றி சொன்ன சசிகலா போன்றவர்கள் எல்லாம் இப்போது காணாமல் போய் விட்டார்கள். அதிமுக எம்.பி.யை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சசிகலா கருத்தும் உள்ளது. பிரதமர் மோடி கூறியதால் தான் அதிமுகவில் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்தும் கூறவில்லை. தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார்.
இதையும் படிங்க;- என்ன கட்சியில் இருந்து நீக்கிட்டாங்க! உச்சநீதிமன்றத்தில் முறையிட்ட OPS! தலைமை நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா?
ஓபிஎஸ் தரப்பு அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். யார் உள்ளே சென்றார்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். இதுதொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.