80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம்..யாருக்கு என்ன லாபம்? திமுகவை கண்டித்த விஜயகாந்த்

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது.

DMDK Vijayakanth opposes the construction of a monument in form of a pen to former Chief Minister Karunanidhi

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, கடலுக்கு நடுவே பேனா வடிவில் நினைவுச்சின்னம் எழுப்ப தமிழக அரசின் திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.81 கோடி செலவில், கடலுக்கு நடுவில் 134 அடி உயரத்தில் பேனா வடிவில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு அனுமதிகோரி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 

DMDK Vijayakanth opposes the construction of a monument in form of a pen to former Chief Minister Karunanidhi

மேலும் இந்த திட்டத்தில், மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து நேராக, இந்த புதிய நினைவுச்சின்னத்துக்குச் செல்லும் வகையில் 650 மீட்டர் தொலைவுக்கு பாலம் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுதொடர்பாக அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

அதில், ‘மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க கூடாது. ரூ.80 கோடி செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம். நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, காலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தினால் மக்கள் அதனை வரவேற்பார்கள். 

DMDK Vijayakanth opposes the construction of a monument in form of a pen to former Chief Minister Karunanidhi

கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது. நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும். மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios