Asianet News TamilAsianet News Tamil

முதல்வரே மாறுவேடத்தில் வந்து பாருங்க.. திமுக அரசை எப்படி கழுவி ஊத்துராங்க தெரியும்.. ஜெயக்குமார் சரவெடி.!

கட்சிக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிக்கை அளித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார்.

former minister jayakumar slams dmk government
Author
Chennai, First Published Jan 7, 2022, 6:30 AM IST

திமுக ஆதரவு சசிகலாவிற்கு இருப்பதால்தான் அவர் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாம்சாட்டியுள்ளார்.

கட்சிக்கு எந்த ஒரு சமந்தமும் இல்லாமல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என அறிக்கை அளித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயகுமார்;- திமுகவின் ஆதரவு இருப்பதால் தான், சசிகலா மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர், திமுகவின் 'பி டீம்' ஆக இருக்கலாம். 

இதையும் படிங்க;- MK Stalin: நேரம் கொடுக்காத அமித்ஷா.. பதிலடி கொடுக்க முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு..!

former minister jayakumar slams dmk government

அம்மா மினி கிளினிக் பொருத்தவரை ஆயிரத்து 800 மருத்துவர்கள் நியமனம் செய்து இருந்தோம். பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக முதற்கட்ட சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது சென்னையில் பல்வேறு இடங்களில் நானே அதனை திறந்து வைத்திருக்கிறேன். அதனை காண்பிக்க நான் தயார். அவர் என்னோடு வருவாரா? காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- எங்களுக்கும் வன்முறை தெரியும்.. நாங்கள் வெகுண்டு எழுந்தால் திமுக தாங்காது.. சரவெடியாய் வெடிக்கும் ஜெயக்குமார்

former minister jayakumar slams dmk government

அரசர்கள் மாறுவேடத்தில் செல்வது போல், முதல்வர் ஸ்டாலின், ரேஷன் கடைகளுக்கு மாறு வேடத்தில் செல்ல வேண்டும். அங்கு, பொது மக்கள் அரசை எப்படி எல்லாம் பேசுகின்றனர் என்று அவர் தெரிந்து கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் வாங்காமல் வடமாநிலங்களில் இருந்து பெறப்பட்டு இருக்கிறது என ஜெயகுமார் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios