Annamalai Vs DMK : தமிழக அரசு தயாரித்த பொருளை 77 கோடி போட்டு வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார் அண்ணாமலை. இந்த விஷயத்தில் அவர்பேசியது கடைந்தெடுத்த முட்டாள் தனமான பேச்சு.
அமைச்சர் நாசர் பேட்டி
நாமக்கல் அருகே அக்கியம்பட்டி மற்றும் முதலைபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், லத்துவாடி பால் குளிரூட்டும் நிலையம், புதிய பால் பண்ணை அமைய உள்ள இடம் ஆகிய இடங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமு நாசர், ‘ அண்ணாமலை தன்னை முன்னிலைப் படுத்துவதற்கு பொய்யான தகவலை படித்த ஒரு ஐ பி எஸ் ஆபிஸர் கூறுவது கேவலமான விஷயம் ஆகும்.

இதையும் படிங்க : AIADMK : அதிமுகவில் திருத்தங்கள் செய்ய கூடாது.. நீதிமன்றத்திற்கு பறந்த மனு.. குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் !
பாஜக தலைவர் அண்ணாமலை
போலீஸ் என்றால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கக் கூடிய வார்த்தைகள் இருக்கிறது. தமிழக அரசு தயாரித்த பொருளை 77 கோடி போட்டு வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார் அண்ணாமலை. இந்த விஷயத்தில் அவர்பேசியது கடைந்தெடுத்த முட்டாள் தனமான பேச்சு ஆகும். இது ஏற்க கூடியது அல்ல. ஐபிஎஸ் ஆபீசர் பேசக்கூடிய பேச்சா இது.

திமுக Vs பாஜக
சாதாரண போலீஸ்காரர் கூட இப்படி பேசமாட்டார். தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள அவர் இப்படி கூறிவருகிறார். நோட்டா ஓட்டுகளை விட அவர் குறைவான வாக்குகளை வாங்குவார். ஒருபோதும் பாஜக திராவிட ஆட்சி மாடல் நடக்கிற இந்த காலகட்டத்தில் காலூன்ற முடியாது. எப்படியாது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி வருகின்றனர்’ என்று கூறினார்.
இதையும் படிங்க : AIADMK : எடப்பாடிக்கு பதவியை விட்டு கொடுங்க ஓபிஎஸ்.. இதான் நியாயம் - ராஜன் செல்லப்பா அதிரடி
