ஓ.பி.ரவீந்திரநாத்தின் பதவி நீக்கம் குறித்து ஒற்றை வரியில் பதில் அளித்த ஓ.பி.எஸ்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத் 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆவணங்களை திருத்தியும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறி தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஓ பி ரவீந்திரநாத் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றது செல்லாது என தீர்ப்பு வழங்கியது. மேலும் மேல்முறையீடு செய்வதற்காக அந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
’இது அரிவாள் பிடித்த கை, பயமுறுத்தி அரசியல் பண்ண நினைத்தால் நடக்காது’ - அண்ணாமலை காட்டம்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி குறித்த நேரத்திற்குள் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
குடிகார கணவரால் சிதைந்த குடும்பம்; மனைவி, மகன் தற்கொலை - மூதாட்டி கவலைக்கிடம்
மேலும் மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட உள்ள பொது சிவில் சட்டம் தொடர்பான கேள்விக்கு இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.