Asianet News TamilAsianet News Tamil

#HBDKalaignar : பல பிரதமர்களையும், குடியரசு தலைவர்களையும் உருவாக்கிய ராஜதந்திரி கருணாநிதி.!

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக 50 வருடங்களுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி மத்தியில்  ஆட்சியையும், குடியரசுத் தலைவரையும் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார் என்றால் மிகையாகாது
 

Former Chief Minister M Karunanidhi is a Raja Tantri who has produced many Prime Ministers and Presidents of the Republic
Author
Tamil Nadu, First Published Jun 3, 2022, 9:27 AM IST

ராஜதந்திரி கருணாநிதி

திமுக தலைவரான கருணாநிதி பல பரிமாணங்களை கொண்டவர் கதாசிரியர்,அரசியல் தலைவர், திரைப்பட வசனகர்த்தா என பல கதாபாத்திரங்களை ஏற்றவர்,  திரைத்துறைப் புகழ் ஒருபுறமும் அரசியல் வட்டாரத்தில் அங்கீகாரம் ஒருபுறமும் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் அவரை பயணிக்க வைத்தது. பெரியாரின் திராவிடச் சிந்தனைகள் இவரது எழுத்துகள் மூலமாக பெரும் பரப்பைக் கண்டன. இந்தியாவின் பல மாநிலங்களில் தேசிய கட்சிகள் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் கலைஞர் இருந்த நாட்கள் வரை எந்த ஒரு தேசிய கட்சியினாலும் ஊடுருவ முடியாத ஒரு வலிமையான கோட்டையாக தமிழகம் இருக்கிறதென்றால் அது கலைஞராலும் அவரது திராவிட இயக்கத்தாலும் தான் என்பது உண்மை.. 1969ல் அண்ணா மறைந்த பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பெரும் சுமை கலைஞருக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் தொடர்ந்து இருந்த சாதனையிலும் உலக நாடுகளின் தலைவர்களைக் கலைஞர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்கா...

Former Chief Minister M Karunanidhi is a Raja Tantri who has produced many Prime Ministers and Presidents of the Republic

சமூக சீர்திருத்த திட்டங்கள்

கை ரிக்‌ஷா  ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு ஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்தது, விதவைகளுக்கு மறுமண உதவித் திட்டங்களை அளித்தது, கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க நிதியுதவி அளித்தது ஆகியன பெண்ணுரிமைக்கான, சமூகப் புரட்சிக்கான அடையாளங்களாகும்,  தனியார் வசம் இருந்த பேருந்துகள் முதன்முறையாக நாட்டுடைமையாக்கப்பட்டது என பல்வேறு சாதனைகளுக்கு கலைஞர் சொந்தக்காரர் ஆவார்

Former Chief Minister M Karunanidhi is a Raja Tantri who has produced many Prime Ministers and Presidents of the Republic

குடியரசு தலைவர்களை உருவாக்கிய கருணாநிதி

 133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்த சாதனை காலத்தை வென்று நிற்கும். 1330 குறளுக்கும் மிக எளிய முறையில் உரை எழுதி, திருக்குறள் உரையாசிரியர்களில் இவரும் தனித்த இடத்தைப் பெற்றுள்ளார். தமிழக ஆட்சியில் மட்டுமில்லாமல் மத்தியில் பிரதமர், குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் கலைஞரின் பங்கு அதிகம், அந்த அளவிற்கு தான் கை காட்டும் நபர் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்படிபட்ட ஆளுமையின்  99 வது பிறந்த தினத்தை திமுகவினர் மட்டுமில்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடி வருகின்றனர். திமுக தலைமையிலான தமிழக அரசோ கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. கலைஞர் கருணாநிதியின்  உடன்பிறப்பே என்ற கரகரத்த குரல் இன்னமும் தமிழக மக்கள் மத்தியில் எதிரொலித்துக்கொண்டுதான் உள்ளது...

இதையும் படியுங்கள்

HBD Kalaignar Karunanidhi : “தமிழுக்கு அகவை 99” - அறிவாலயம் முதல் முரசொலி வரை முதல்வர் ஸ்டாலின் மரியாதை !


 

Follow Us:
Download App:
  • android
  • ios