Asianet News TamilAsianet News Tamil

மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்.. மத்திய அரசை கழுவி கழுவி ஊற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பித்த  மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Examination center in Lakshadweep for Madurai student. madurai mp letter to central government.
Author
First Published Aug 29, 2022, 1:17 PM IST

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பித்த  மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாணவர் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மத்திய  பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் ஒவ்வோரு பிரிவுக்கும் தேதி அறிவிக்கப்பட்டு தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது, இந்தியாவில் மட்டுமின்றி நாடுகடந்த மாணவர்களும் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து  தேர்வி எழுதி வருகின்றனர், சமீபகாலமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் மத்திய பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.

Examination center in Lakshadweep for Madurai student. madurai mp letter to central government.

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மீது திருட்டு வழக்கு பதிவு...! இது தான் அவர் லட்சணம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

இந்நிலையில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற்றது, அதில்பல குழப்பங்கள் நடந்தது,  தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்குகூட ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுக்கான நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் தமிழில் தயார்படுத்தி வந்த நிலையில் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்,  பின்னர் அம்மாணவர்கள் இது குறித்து அப்பல்கலைகழக துணைவேந்தரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் அது குறித்து விளக்கமளித்த பல்கலைகழக துணைவேந்தர் கிருஷ்ணன்.

இதையும் படியுங்கள்: கர்நாடகாவில் இருந்த உனக்கு மொய் விருந்து பற்றி என்ன தெரியும்..? திமுகவுடன் சேர்ந்து அண்ணாமலையை பொளந்த டிடிவி

நுழைவுத்தேர்வை பார்வையிட மேலிடப் பொறுப்பாளர்கள் வருகை புரிந்துள்ளனர், நடந்த குளறுபடிகள் அனைத்தையும் பதிவு செய்துள்ளனர். விரைவில்அவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில் அதே திருவார் மத்திய பல்கலைக் கழக நுழைவுத்தேர்வுக்கு மதுரையைச் சேர்ந்த மாணவர் விண்ணப்பித்துள்ள நிலையில அவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.  இதனால மாணவர் செய்வதறியாது திகைத்து வருகிறார், இந்நிலையில் இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு :- மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம்ம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு நுழைவுத்தேர்வுக்கு அலைகடல் தாண்டி பயணப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Examination center in Lakshadweep for Madurai student. madurai mp letter to central government.

தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலை கழகம். திருவாரூரில்... அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. அவர் மதுரைக்காரர். பிரித்துப் பார்த்த அவரது தந்தைக்கு அதிர்ச்சி. தேர்வு மையம் லட்சத் தீவில்... எப்படி மாணவர் போவார். 

கப்பலில் அல்லது விமானத்தில்... இப்படி ஒரு வாரம் கூட அவகாசம் தராமல் பயணத்திற்கு டிக்கெட் வாங்குவது என்றால் எவ்வளவு செலவு. விமானத்திற்கு நாளுக்கு நாள் கட்டணம் ஏறுகிறது. இதில் அனுமதிச் சீட்டோடு வந்துள்ள அறிவுரை சீட்டில் ஒரு நாள் முன்பாகவே வந்து மையத்தைப் பார்த்துக் கொள்ளுங்க என்று ஆலோசனை வேறு, 

மாணவரின் தந்தை பதறிப் போய் வந்தார். இவரைப் போல எத்தனை மாணவர்களோ, பெற்றோர்களோ... ஏழை, நடுத்தர குடும்பங்கள் என்ன செய்யும்? மன உளைச்சல்... பணத்திற்கும் அலைச்சல்... உயர் கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இது போன்ற மாணவர்களுக்கு மையத்தை மாற்றுங்கள் என்று...தேர்ச்சி பெறுவதை விட தேர்வு மையத்துக்கு சென்று சேர்வது கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios