கர்நாடகாவில் இருந்த உனக்கு மொய் விருந்து பற்றி என்ன தெரியும்..? திமுகவுடன் சேர்ந்து அண்ணாமலையை பொளந்த டிடிவி
வட்டியில்லாமல் கடன் தருவதுதான் மொய்விருந்து, ஒருவரை கை தூக்கி விடுவது தான் மொய் விருந்து, ஆனால் இது குறித்து கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்
.
வட்டியில்லாமல் கடன் தருவதுதான் மொய்விருந்து, ஒருவரை கை தூக்கி விடுவது தான் மொய் விருந்து, ஆனால் இது குறித்து கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலைக்கு ஒன்றும் தெரியாது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிதான் மொய்விருந்து என அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் டிடிவி தினகரன் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். இத போல திமுக எம்எல்ஏவும் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
முழு விவரம் பின்வருமாறு:- கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா என்ற பெயரில் 8,000 பேருக்கு 100 ஆடுகள் வெட்டி மொய் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிட்டத்தட்ட 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாக தகவல் வெளியானது, மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மொய் விருந்தில் வசூலான தொகை பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில்தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்,
இதையும் படியுங்கள்: மது வருவாய் அதிகரிக்குதுன்னா.. பெண்கள் தாலி அறுப்பதும்.. குடும்பங்கள் சீரழிவதும் பொருளாகும்.. அன்புமணி.!
இதுதான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது, குறிப்பாக புதுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டங்களில் மொய் விருந்து என்பது ஒரு கலாச்சார நிகழ்ச்சியாகவே நடந்து வருகிறது, வறுமையில் உள்ளவர்கள் தொழில் தொடங்குவதற்காக மொய்விருந்து மூலமாக முதலீடு திரட்டி நெருக்கடியிலிருந்து மீள்வர், வட்டியில்லாத கடன் முயற்சிதான் மெய் விருந்து, வீடு கட்டுவதற்கு, தொழில் தொடங்குவதற்கு நடத்தப்படுவதுதான் மொய் விருந்து, ஒருவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மொய் விருந்து நடத்துவது வழக்கமாக உள்ளது, இந்நிலையில்தான் இதை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
இதையும் படியுங்கள்: தொண்டர்கள் நம்ம பக்கம் இருக்காங்க! அவங்க பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்காங்க! இபிஎஸ்க்கு எதிராக வெடித்த OPS.!
வறுமையில் சிக்கித் தவிப்பவர்கள், வட்டிக்கு பணம் வாங்காமல் வாழ்வில் வழிதேடும் கடைசி வாய்ப்பாக மொய் விருந்து நடத்துவது வழக்கம், ஆனால் திமுக எம்எல்ஏ தனது சுயலாபத்திற்காக இதை நடத்தியுள்ளார், குறிப்பாக கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற ஒரே கல்லில் ஐந்தாறு மாங்காய்களை அடிதுள்ளார், திமுகவின் விஞ்ஞான ஊழல் திறமையில் தலைமையையே விஞ்சக் கூடிய வித்தையை காட்டியிருக்கிறார் அசோக்குமார் என்றும் அண்ணாமலை காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார், அண்ணமலையின் இந்த விமர்சனத்திற்கு விளக்கமளித்த திமுக பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், மொய் விருந்து என்ற கலாச்சாரத்தை அண்ணாமலை தவறாக விமர்சிக்கிறார்.
அரசியல் ஆதாயத்திற்காக எங்களது கலாச்சாரங்களில் ஒன்றான மொய்விருந்து அண்ணாமலை விமர்சித்திருக்கிறார், ராஜராஜன் சோழன் காலத்திலிருந்தே மொய்விருந்து எங்கள் பகுதியில் நடந்து வருகிறது, இது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியல்ல, எல்லாமே ஓப்பனாக வெளிப்படையாகத்தான் நடக்கும், வசுலாகும் பணத்தை வங்கி அன்று மாலையே கடனுக்கு பட்டுவாடா செய்து விடுவோம், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அவர்களுக்கு மொய் விருந்து அடிப்படை தெரியவில்லை எனவஅவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார், வட்டியில்லா கடன் தருவதுதான் மொய் விருந்து, ஒருவரை கை தூக்கி விடுவது தான் மொய் விருந்து, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை செய்த அண்ணாமலைக்கு மொய் விருந்து பற்றி எதுவும் தெரியாது என அவர் கூறியுள்ளார்.