Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மீது திருட்டு வழக்கு பதிவு...! இது தான் அவர் லட்சணம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

பதவி மீது ஆசை இல்லை என்று கூறியவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து  தொண்டர்களை  காயப்படுத்தியது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

RB Udayakumar has criticized that a theft case has been filed against OPS
Author
First Published Aug 29, 2022, 1:00 PM IST

ஓபிஎஸ் மீது திருட்டு வழக்கு

மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கிராமத்து பழமொழி போல, பன்னீர்செல்வம் குழப்பமான மனநிலையில், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை, கொச்சைப்படுத்தும் விதமாக குண்டர்கள் என்று பேசுகிறார், தொண்டர்களின் கோயிலாக உள்ள தலைமை கழகத்தை, யார் குண்டர்களுடன் வந்து சர்வநாசம் செய்தது என்று அனைவருக்கும் தெரியும் என கூறினார்.

நடைபெற்ற பொதுக்குழுவில் ராணுவ கட்டுப்பாடு கழகத்தினர் இருந்தனர், பொது குழுவில் எந்த சலசலப்பும் கிடையாது, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மீது திருட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது, இதுதான் அவரின் லட்சணம் ஆகும் பன்னீர்செல்வம் கருத்துக்களால் தொண்டர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளனர், முதலமைச்சர் பதவி மீதும்,தலைவர் பதவி மீதும் ஆசை இல்லை என்று கூறுகிறார், அப்படி என்றால் உரிமையில் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மறுபடியும் உயர்நீதிமன்றம் சென்று மனு தாக்கல் செய்தது ஏன்?  நீங்கள் வழக்கு தொடுப்பது மூலம் தொண்டர்கள் மிகவும் மன வேதனையையும், கடுமையான மன உளைச்சலில் உள்ளார்கள் என தெரிவித்தார்.

அண்ணன் பழைய பாசத்தோடு சொல்றேன் கேளு தம்பி...! ஆர் பி உதயகுமாருக்கு அறிவுரை வழங்கிய டிடிவி தினகரன்

RB Udayakumar has criticized that a theft case has been filed against OPS

கும்பகர்ணனை போல் தமிழக அரசு

தற்பொழுது பருவ மழை பெய்து வருகிறது, மேட்டூரில் ஒரு லட்சத்து 20,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, மக்களுக்கு உரிய விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும், கடந்த மாதம் பெய்த மழையால் நீரில் சிக்கி சிலர் மரணம் அடைந்துள்ளனர், ஆகவே உரிய வழிகாட்டுதலை அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  தமிழகத்தில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை இருந்தது, ஆனால் தமிழகத்தில் சுதந்திரமாக காவல்துறை செயல்படுவதற்கு அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.  

தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜக..? பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது- வைகோ ஆவேசம்

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டன, இது மிகவும் அபாயமான சூழ்நிலையாக உள்ளதாக தெரிவித்த அவர், முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுவதை விட்டுவிட்டு உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும் என கூறினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, ஆன்லைன் ரம்மி தற்கொலை, போதைபொருட்கள் அதிகரித்து வருவது தொடர்பாக தமிழக அரசிடம் இபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தமிழக அரசு எதையும் கேட்காமல் கும்பகர்ணனை போல் தூங்குவதாக குற்றம்சாட்டினார்.  

இதையும் படியுங்கள்

நள்ளிரவில் திடீரென பெய்த கனமழை... மண்ணில் புதைந்த வீடு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி...

Follow Us:
Download App:
  • android
  • ios