இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது என முன்னாள்  இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது .  இதை சரிக்கட்ட மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் ,  பொருளாதாரத்தை சீர் செய்ய முடியவில்லை,  ஆனாலும் பாஜக எதை எதையோ கூறி சமாளித்து வருகிறது . இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற திட்டக்கமிஷன் முன்னாள் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார், 

 

அப்போது பேசிய அவர் இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது.  அதாவது ஒரு பிரச்சனையை அடையாளம் காண மறுத்தால் அதற்கு நம்பகமான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று அர்த்தம் .  பாஜகவுக்கு தற்போது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையே என்னவென்று தெரியவில்லை ,  முதலில் பிரச்சனையை அடையாளம் கண்டால் மட்டுமே  அதை தீர்ப்பதற்கான வழிமுறைகளை காணமுடியும்,    பிரச்சினையை கண்டுபிடிப்பதற்கே  இவர்கள் போராடி வருகின்றனர் . இதனால் பிரச்சனையை சரி செய்ய முடியாத நிலையே  ஏற்படும் என பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படியுங்க :  துக்கத்தில் உள்ள சீனாவுக்கு கிடைத்த ஒரு நல்ல செய்தி...!! ஆண்டவர் சோதிப்பார் கைவிடமாட்டார்...!!

தொடர்ந்து பேசிய அவர் ,  நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதம் அளவிற்கு கொண்டுவருவதற்கு சாத்தியம் இருக்கிறது ,  ஆனால் இது பொருளாதார கொள்கையில் மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளையும் செய்ய வேண்டும் . அப்போதுதான் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என மன்மோகன் சிங் கூறினார் .  இதேபோல் 1991ம் ஆண்டு நிதியமைச்சராக தான் இருந்த சமயத்தில் பொருளாதார நிலை கடும் சிக்கலில் இருந்த போது பொருளாதாரத்தின் சீரமைப்பு  ஏற்படுத்த தாராளமயமாக்கல் திட்டத்தை தான் கொண்டு வந்ததை மன்மோகன்சிங் அப்போது  நினைவுகூர்ந்தார் .