துக்கத்தில் உள்ள சீனாவுக்கு கிடைத்த ஒரு நல்ல செய்தி...!! ஆண்டவர் சோதிப்பார் கைவிடமாட்டார்...!!

இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான் ,  ஹாங்காங் ,  பிலிப்பைன்ஸ் ,  சிங்கப்பூர் , அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் பரவி இந்த  வைரஸ் சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது . 
 

china have good sign from corona virus, virus power has slowly reducing

கொரோனா வைரஸ் தாக்குதல் முன்பைப் போல் இல்லாமல் வெகுவாக குறைந்துள்ளதாக  சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது . வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு  சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ்  சீனா முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2118 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 74 ஆயிரத்து 576 பேருக்கு  வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

china have good sign from corona virus, virus power has slowly reducing

இதுவரையில் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இது வேகமாக பரவி வருகிறது ,  வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருவதுடன் வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் தீவிர சிகிச்சை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது .  அந்நாட்டு மருத்துவர்களும் இரவு பகல் பாராமல்  மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர் .  இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான் ,  ஹாங்காங் , பிலிப்பைன்ஸ் ,  சிங்கப்பூர் , அமெரிக்கா ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் பரவி இந்த  வைரஸ் சர்வதேச அச்சுறுத்தலாக மாறியுள்ளது . 

china have good sign from corona virus, virus power has slowly reducing

இந்நிலையில் வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார  நிறுவனத்தின் மருத்துவ குழுவுடன்  சீன மருத்துவர்கள் ஆலோசித்தும்  தீவிர ஆய்வும் நடத்தி வருகின்றனர் ,  இந்த நோய்க்கு இதுவரை  முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை .   இந்நிலையில் வைரஸ் தாக்குதல் முன்பைப்போலில்லாமல் வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது , இந்த வைரஸின் வீரியம் குறையத்தொடங்கியுள்ளது என சீன அரசு தகவல் தெரிவித்துள்ளது .  சீனாவின் இந்த அறிவிப்பு  அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது சர்வதேச  நாடுகளிடமும் கவனத்தை பெற்றுள்ளது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios