Asianet News TamilAsianet News Tamil

திமுக ஆட்சியில் கஞ்சா, சாராயம், கட்டப்பஞ்சாயத்து அதிகரிப்பு.. வறுத்தெடுக்கும் மாஜிஅமைச்சர்..

மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெறுவதால்,  அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 

Ex Minister Thangamani Press meet
Author
Namakkal, First Published Mar 14, 2022, 10:06 PM IST

மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெறுவதால்,  அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மாடகாசம்பட்டியில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ பின்னர் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியை விட்டுச் செல்வதில்லை. ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமானால் செல்லலாம். அவர்கள் கட்சிக்கு உண்மையானவர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: டி.கே.எம்.9 ரக அரிசியினை கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

மேலும் சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக அறவித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை.மாநிலம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, சாராயம், லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் படிக்க: Azhi Therottam: புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம்.. காலை 8.10 மணிக்கு வடம்பிடிப்பு..2000 போலீசார் பாதுகாப்பு..

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று தெரிவித்த அவர், நாமக்கல் நகராட்சி புதிய குடிநீர் திட்டம் ரூ.150 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் கொண்டு வந்த திட்டம் என்கின்றனர் என்று குற்றச்சாட்டிய அவர்,  மக்களுக்கான தேவைகளை அறிந்து அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

மேலும் படிக்க: சி.பி.எம் நிர்வாகி கொலை வழக்கு..12 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு.. தண்டனை முழு விவரம் ..

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி  அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு சொந்தமான 60 க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 2 கோடி ரூபாய் ரொக்கம், 1.130 கிலோ தங்கம், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள் ,கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணிணி ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Hijab issue: கர்நாடகாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு.. ஹிஜாப் வழக்கில் நாளை இடைக்கால உத்தரவு..

Follow Us:
Download App:
  • android
  • ios