ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை! முதல் சுற்றிலையே 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஈவிகேஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 1414, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 3642 வாக்குகள் பெற்றுள்ளார். .
வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 போ் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 போ் வாக்களித்திருந்தனா். மொத்தமாக 74.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
ஈவிகேஎஸ் முன்னிலை
இதனையடுத்து ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதன் முதல் சுற்றில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 3642 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 1414 வாக்குகளும், நாம் தமிழர் 65, தேமுதிக 17 வாக்குகள் பெற்றுள்ளனர். தற்போது உள்ள நிலையில் சுமார் 2000 வாக்குகள் முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தபால் வாக்கில் முன்னனி பெற்றது யார்.? வெளியான பரபரப்பு தகவல்