ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தபால் வாக்கில் முன்னனி பெற்றது யார்.? வெளியான பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

EVKS lead in Erode East by election vote tally

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மார்டைப்பால் காலமானார். இதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக சார்பாக ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இதனையடுத்து வாக்கு எண்ணும் பணி ஈரோடு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

EVKS lead in Erode East by election vote tally

இதனையடுத்து 16 மேஜைகளில் மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் தென்னரசை விட அதிக வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். தற்போது வரை ஈவிகேஸ் 102 வாக்குகளும் தென்னரசு 16 வாக்குகளும் பெற்றுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios