ஓபிஎஸ்யை குனிந்து கும்பிடும் இபிஎஸ்.! ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சியில் எடப்பாடி அணி
திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் நடத்தும் முப்பெரும் விழா மாநாடு தொடர்பாக வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி குனிந்து கும்பிட்டது புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் . இபிஎஸ் ஆதரவாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஓபிஎஸ் அணியின் முப்பெரும் விழா மாநாடு
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் யார் தலைமை தாங்குவது என்ற தொடங்கிய மோதல் தற்போதும் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் இடையே ஒற்றை தலைமை போராட்டத்தால் தற்பொழுது நீதிமன்ற உத்தரவின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகராக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது செல்வாக்கை நிருபிக்கும் வகையில் திருச்சியில் அதிமுக முப்பெரும் விழா மாநாட்டை ஓ.பன்னீர் செல்வம் நடத்தவுள்ளார். இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் தொடர்கள் வர வேண்டும் என ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
தொண்டர்களை அழைத்து பேனர்
அதிமுகவின் தொண்டர்கள் தன் பக்கம்தான் என நிரூபிக்கும் விதமாக திருச்சியில் மாநாடும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் திருச்சியில் நடத்தும் மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மக்கள் கூடும் இடங்களில் ஆதரவு திரட்டும் விதமாக பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் ஓபிஎஸ் இன் சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த திருச்சி மாநாட்டிற்கான பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை குனிந்து வணங்குவது போல் இருந்த புகைப்படத்தை அச்சிட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
ஓபிஎஸ்யை கும்பிடும் இபிஎஸ்
இது இபிஎஸ் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையவைத்தது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை குனிந்து கும்பிட்டது போல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் என பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியகுளம் காவல்துறையினர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்களை வைத்தே காவல்துறையினர் அகற்றி பேனர்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்