Asianet News TamilAsianet News Tamil

உதவியாளரின் துப்பாக்கியை வாங்கி விஜயகுமார் சுட்டுக்கொண்டது ஏன்.? சந்தேகமாக இருக்கு- சிபிஐ விசாரணை தேவை -இபிஎஸ்

டிஐஜி விஜயகுமாரின் மரணத்தில் பல்வேறு  சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  ஆகவே விஜயகுமார் IPSதற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். 

EPS request for CBI investigation in DIG Vijayakumar suicide
Author
First Published Jul 7, 2023, 12:20 PM IST

கோவை டிஐஜி தற்கொலை

கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக கடந்த ஜனவரி மாதம் முதல் பதவி வகித்து வந்தவர் விஜயகுமார். இவர் இன்று காலையில் தனது முகாம் அலுவலகத்தில்  இருந்த நிலையில் திடீரென தனது பாதுகாப்பு உதவியாளர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாரின் மறைவு காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணிச்சுமை காரணமாக மரணம் என ஒரு தகவரும், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை என மற்றொரு தகவலும் பரவி வருகிறது.

EPS request for CBI investigation in DIG Vijayakumar suicide

இரங்கல் தெரிவித்த இபிஎஸ்

இந்தநிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின்  மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

EPS request for CBI investigation in DIG Vijayakumar suicide

சிபிஐ விசாரணை நடத்திடுக

காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

 டிஐஜி விஜயகுமாருக்கு விடுப்பு கொடுத்தும், கவுன்சிலிங் அளித்தும் தற்கொலை.? காரணம் பணி சுமையா.? டிஜிபி விளக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios