டிஐஜி விஜயகுமாருக்கு விடுப்பு கொடுத்தும், கவுன்சிலிங் அளித்தும் தற்கொலை.? காரணம் பணி சுமையா.? டிஜிபி விளக்கம்
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லையென தெரிவித்துள்ள டிஜிபி சங்கர் ஜிவால், விடுப்பு கொடுத்தும், உயர் அதிகாரிகளால் கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
கோவை டிஐஜி தற்கொலை- தேனி செல்லும் சங்கர் ஜிவால்
கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் இன்று காலை தனது கோவை பந்தய சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவு போலீஸ் அதிகாரிகளை மட்டுமில்லாமல் தமிழக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐபிஎஸ் அதிகாரியான விஜயக்குமார் பல இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றர். இந்தநிலையில் விஜயக்குமார் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் விஜயகுமார் மறைவையடுத்து அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் வகையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று காலை மதுரை புறப்பட்டு சென்றார். அங்கிருந்து தேனி செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணி சுமையால் தற்கொலையா.?
இந்தநிலையில் டிஐஜி விஜயகுமார் மறைவு தொடர்பாக டிஜிபி அலுவலகம் கூறுகையில், ஒரு நல்ல அதிகாரியை நாங்கள் இழந்து விட்டோம், அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை அதிரடியாக கை செய்தவர் எனவும் தெரிவித்துள்ளது. டிஐஜி தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லையென கூறியுள்ள டிஜபி அலுவலகம். அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் குடும்பத்தினரோடு கோவை சென்று அவர்களுடனே இருந்து வந்துள்ளார். மேலும் விஜயகுமாருக்கு விடுப்பு வழங்கப்பட்டு காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
கோவை டிஐஜி தற்கொலையை எளிதாகக் கடந்து செல்ல முடியாது.! பின்னனி என்ன.? விசாரணை நடத்திடுக- அண்ணாமலை