அதிமுக கட்சி கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவதா.! களத்தில் இறங்கிய இபிஎஸ்.! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரடி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவந்தாகவும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதிமுகவில் அதிகார மோதல்
ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஒருமுறை ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் மறுமுறை எடப்பாடி பழனிசாமி ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது. இதனையடுத்து பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த வழக்கானது விரைவில் விசாரணைக்குவரவுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் அணியை வலுப்படுத்தும் வகையில் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை... முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.ஹரி பரபரப்பு கருத்து!!
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து பேசிவருகிறார். ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமித்து மாவட்ட செயலாளர்களை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் உள்ளனர். உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்ட நிலையில், ஓபிஎஸ் தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்று பயன்படுத்தி வருவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் பொறுப்பு இபிஎஸ் வசம் இருப்பதால் ஓபிஎஸ் இது போன்று செயல்படுவது குறித்து சட்டவிளக்கம் (Legal notice) விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸிற்கு உடனடியாக ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்காவிட்டால், சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்