அராஜகத்தின் உச்சத்தில் திமுக..! வேடிக்கை பார்க்கும் ஸ்டாலின்..! நிர்வாகிகளுக்கு திடீர் உத்தரவிட்ட எடப்பாடி

கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்து அராஜக செயல்களில் ஈடுபட்ட திமுக-வினரைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான தமிழகஅரசைக் கண்டித்தும் அதிமுக சார்பில் கரூரில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami has said that he will hold a public meeting to condemn DMK anarchy

காரில் இருந்து கவுன்சிலர் கடத்தல்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19.12.2022 அன்று நடைபெற இருந்த நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு கழக வேட்பாளர் வெற்றிபெறும் சூழ்நிலை இருந்ததால், கரூர் மாவட்டக் கழக அவைத் தலைவரும், மாவட்ட ஊராட்சிக் குழு 9-வது வார்டு உறுப்பினருமான திரு. S. திருவிகா மற்றும் அவருடன் பயணம் செய்த கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்களின் கார் மீது இரும்புக் கம்பியால் தாக்கி கண்ணாடியை உடைத்து, கவுன்சிலரின் முகத்தை துணியால் மூடி காரிலிருந்து கடத்திச் சென்று தேர்தல் முடிந்தவுடன் விடுவித்துள்ளனர்.

யாரு செத்தா எனக்கு என்ன இருக்கும் ஆளுநர்? அவங்கள நீங்க சந்தித்தன் நோக்கம் என்ன சொல்லுங்க! முத்தரசன் ஆவேசம்..!

Edappadi Palaniswami has said that he will hold a public meeting to condemn DMK anarchy

அதிமுக நிர்வாகியை தாக்கிய திமுக

அதனைத் தொடர்ந்து, கடந்த 20.12.2022 அன்று மாலை, கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் திரு. K.N.R. சிவராஜ் அவர்கள் கரூர்-ஈரோடு வேலுச்சாமிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திமுக-வைச் சேர்ந்த குண்டர்கள் காரில் ஆயுதங்களுடன் வந்து அவரை கடத்திச் சென்று, ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு பின்னர் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். திமுக-வினர் அராஜகத்தின் உச்சத்திற்கே சென்று இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். இந்த படுபாதக செயல்களை விடியா திமுக அரசின் முதலமைச்சர் வேடிக்கை பார்த்து வருவதும், காவல் துறையினர் திமுக-வினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

பாஜகவின் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை... முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.ஹரி பரபரப்பு கருத்து!!

Edappadi Palaniswami has said that he will hold a public meeting to condemn DMK anarchy

கண்டன பொதுக்கூட்டம்

இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் முழு ஒத்துழைப்போடு, திமுக-வினர் இத்தகைய அராஜக செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதற்கு, எனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அராஜகத்திற்குப் பெயர்போன திமுக-வினரின் வன்முறை செயல்களைக் கண்டித்தும்; சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்குக் காரணமான விடியா அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற 29.12.2022 வியாழக் கிழமை மாலை, கரூர் மாவட்டம், கரூர் மாநகரில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில்,

Edappadi Palaniswami has said that he will hold a public meeting to condemn DMK anarchy

திரு. கே.பி. முனுசாமி, M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், M.L.A., அவர்கள் கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திரு. நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அவர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திரு. பி. தங்கமணி, M.L.A., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திரு. M.R. விஜயபாஸ்கர் அவர்கள் கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஆகியோர் பங்கேற்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திமுக-வினரின் அராஜக வன்முறை செயலைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

என் ராசி வித்தியாசமானது.! நான் புகார் கொடுத்தால் அவ்வளவு தான்.! அப்போ ஜெ. இப்போ அண்ணாமலை- ஆர்.எஸ் பாரதி அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios