ஜேசிடி பிரபாகரன் அதிமுக வேஷ்டி கட்டியதும் இல்லை, கட்சிகாரரும் இல்லை..! இறங்கி அடிக்கும் இபிஎஸ்
அதிமுக வேஷ்டி கட்டுறவன் தான் அதிமுக கட்சிகாரன். அவர் அதிமுகவே இல்லை, பல கட்சிக்கு சென்று வந்தவர். வேடந்தாங்கல் பறவை போல சீசனுக்கு கட்சி மாறி செல்பவர் தான் ஜேசிடி பிரபாகர் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
எய்ம்ஸ் - குரல் எழுப்பாத திமுக
அதிமுகவின் 51-வது ஆண்டு பொன் விழாவையொட்டி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் வளர்ச்சி தொடர்பாகவும், பொன்விழாவையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசிடம் திமுக எம்பிக்கள், குரல் கொடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 38 உறுப்பினர்களும் ஏன் விவாதிக்கவில்லை பிரச்சனை எழுப்பவில்லையென கேள்வி எழுப்பினார். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தவரை தமிழக மக்களின் பிரச்சனைக்காகவும், காவிரி நதிநீர் பிரச்சினைக்காகவும் பாஜக கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதி தொடர்ந்து பல நாட்கள் நாடாளுமன்ற அவையை ஒத்தி வைக்கும் அளவிற்கு குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.
மடியில் கனமில்லை- இபிஎஸ்
இபிஎஸ் அணியினர் 41ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகரன் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜே சி டி பிரபாகரன் அதிமுக கட்சி வேஷ்டி கட்டியவர் இல்லை, அதிமுக கட்சிகாரன் என்று சொல்வதற்கு அசிங்கம். அதிமுக வேஷ்டி கட்டுறவன் தான் அதிமுக கட்சிகாரன். அவர் அதிமுகவே இல்லை, பல கட்சிக்கு சென்று வந்தவர். வேடந்தாங்கல் பறவை போல சீசனுக்கு கட்சி மாறி செல்பவர் தான் ஜேசிடி பிரபாகர் என கூறினார். 41 ஆயிரம் கோடி முறைகேடு என கூறுகிறார். எப்படி எதில் கொள்ளை அடித்தோம். இப்போது என் மீது கூட வழக்கு போட்டார்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. ஆர் எஸ் பாரதி இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கூறுகிறார். ஆனால் இல்லைவே, இல்லை இந்த வழக்கை நடத்தியே ஆக வேண்டும் என கூறியுள்ளேன். அதிமுகவை பொறுத்தவரைக்கும் மடியிலே கனமழை வழியிலே பயமில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படியுங்கள்