Asianet News TamilAsianet News Tamil

கரும்புக்கு அரசு அறிவித்ததோ ரூ.33..! விவசாயிக்கு அதிகாரிகள் கொடுப்பதோ 15 ரூபாய்- திமுக அரசை விளாசும் இபிஎஸ்

பொங்கல் பரிசாக செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி ரூபாயும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

EPS has alleged irregularities in procurement of sugarcane for Pongal gifts
Author
First Published Jan 5, 2023, 12:32 PM IST

கரும்பு கொள்முதல் செய்யப்படும் போது விவசாயிகளுக்கு குறைவான தொகையை அதிகாரிகள் வழங்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கியதைப் போல், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முழு செங்கரும்பு வழங்க வேண்டும் என்றும், செங்கரும்பை விவசாயிகளிடம் நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதேபோல், செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த செங்கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்தி தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தினர்.

கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து பேசலாமா? RN.ரவியை ரவுண்ட் கட்டும் டி.ஆர். பாலு

EPS has alleged irregularities in procurement of sugarcane for Pongal gifts

இந்த விடியா அரசு எங்களது தொடர் கோரிக்கையை அடுத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு முழு செங்கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. மேலும், ஒரு கரும்பு 33 ரூபாய் வீதம் 2.19 கோடி கரும்புகள் கொள்முதல் செய்வதற்காக 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒரு கரும்புக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 33/- ரூபாய். ஆனால், இப்போது மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், கரும்பு கொள்முதலில் பெரிய முறைகேடுகள் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன.

இரண்டு மாஜி எம்எல்ஏக்களுக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஸ் அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓபிஎஸ்

EPS has alleged irregularities in procurement of sugarcane for Pongal gifts

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை இந்த விடியா அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அரசு அறிவித்த ஒரு கரும்புக்கு விலையான 33/- ரூபாய் முழுவதுமாக விவசாயிகளுக்கு சென்றடைவதை இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். அரசு அறிவித்த கரும்புக்கான முழு தொகையும் விவசாயிகளைச் சென்றடையாவிடில், பொறுப்புள்ள எதிர்கட்சியான நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்றும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செங்கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், இந்த விடியா அரசை எச்சரிக்கை செய்கிறேன்.

EPS has alleged irregularities in procurement of sugarcane for Pongal gifts

கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் நோக்கத்தோடு அதிகாரிகள் செயல்படுவது, இடைத்தரகர்களை பயன்படுத்துவது போன்ற விடியா திமுக அரசின் விவசாய விரோத செயல்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பட்டமளிப்பு விழாவிற்கு நேரம் ஓதுக்காத ஆளுநர்..! பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி-ராமதாஸ் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios