தொடரும் அதிமுக- பாஜக மோதல்..! மூத்த நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலயில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஓபிஎஸ்,சசிகலா, டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தநிலையில் அவரது மனுவை தள்ளுபடி செய்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்ததை உறுதிப்படுத்தியது. இதனையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (மார்ச் 9ஆம் தேதி) நடைபெறவுள்ளது. நாளை மறுதினம் (10ஆம் தேதி) மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது.
எடப்பாடி ஆலோசனை
இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மூத்த நிர்வாகிகளாக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 3 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்தி முடிப்பது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாஜக நிர்வாகிகளின் விமர்சனம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் தான் கட்டுப்படுத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் உருவபடத்தை எரித்தவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்
அதிமுகவில் தொடர்ந்து இணையும் பாஜக நிர்வாகிகள்..! மாநில செயலாளரை தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி