ஈரோடு தேர்தலில் டெபாசிட் வாங்கியது எப்படி.? கோவையில் 10 தொகுதியை கைப்பற்ற யார் காரணம்.? அதிமுகவை சீண்டும் பாஜக
தேர்தல்களில் அதிமுக- பாஜக வாங்கிய வாக்கு சதவிகிதம் என்ன.? என இருதரப்பு நிர்வாகிகள் சமூகவலைதளத்தில் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக- அதிமுக மோதல்
பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து விட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி "அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். மேலும் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என கூறியவர்கள் தற்போது 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்து இருந்தார்.
தேர்தல் வெற்றிக்கு யார் காரணம்
இதற்கு பதில் அளித்த அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி சிங்கை ராமசந்திரன் NOTA-வை விட குறைவாக வாக்குகள் வாங்கி வந்த நிலையில், 2021 தேர்தலில் பாஜக எப்படி MLAக்களை வென்றது என்பதே இதற்கான பதில்! அதிமுக யார் தயவும் இன்றி, தனித்து போட்டியிட்டு தேர்தல்களை வென்ற இயக்கம். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே! என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக தொழிற்பிரிவு துணை தலைவர் செல்வகுமார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 2021 - கோவையில் 10/10 வெற்றி பெற்றதற்கு காரணம் பாஜக. 2022 - உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்ற அதிமுக கோவையில் 3/100 மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 2023 - ஈரோட்டில் டெபாசிட் வாங்கவே பாஜக தயவு தேவைபட்டது.
டெபாசிட் வாங்க பாஜகவே காரணம்
திமுகவை எதிர்க்க திராணியற்ற நிலையில், ஈரோடு கிழக்கு படு தோல்வியை திசை திருப்பவே பாஜவை சிண்டுகிறது அதிமுக எடப்பாடி அணி என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த சிங்கை ராமசந்திரன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக 40.88 சதவிகித வாக்குகளை பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் பாஜகவோ2.86 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாக விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த செல்வகுமார், 2016 தேர்தல் வெற்றிக்கு காரணம் ஜெயலலிதாவின் தலைமை என குறிப்பிட்டுள்ளார்.
20 % வாக்குகளை இழந்த அதிமுக.?
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 25% வாக்குகளை பெற்றதாகவும், பாஜக 5.41 % வாக்குகளை பெற்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் 25.75 வாக்கு சதவிகிதத்தை பெற்றதாக தெரிவித்தவர். 20 சதவிகித ஓட்டுகள் குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அதிமுக- பாஜக நிர்வாகிகளுக்குள் இடையே ஏற்பட்ட மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்