ஓபிஎஸ் மகனின் எம்.பி. பதவிக்கு ஆபத்து? ரவீந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி..!
உயர்நீதிமன்றம் எம்.பி. ரவீந்திரநாத் எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்திருந்தார்.
தனது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரும் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றவர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். இந்த தேர்தலில் ரவீந்திரநாத் குமார் 76,319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் பற்றி யாரும் பேச கூடாது..? அதிமுகவினருக்கு திடீர் கட்டளையிட்ட எடப்பாடி பழனிசாமி
அவர் தாக்கல் செய்த மனுவில்;- ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். ஆகையால், அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இதனிடையே தேர்தல் குறித்து தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு எம்.பி. ரவீந்திரநாத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எம்.பி. ரவீந்திரநாத் எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும் கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்திருந்தார்.
இந்த மனு சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில் இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க;- “அதிமுக பிளவு எப்படியும் பாஜகவுக்கு ப்ளஸ் தான்..” அதிமுக கதி அவ்ளோதான் ? பகீர் கிளப்பிய குருமூர்த்தி !