பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு.! அதிமுகவினருக்கு அலர்ட் கொடுத்த எடப்பாடி

30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதி, சபரீசன் உள்ளதாக  அமைச்சரே கூறி உள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறை செல்ல உள்ளதாகவும் கூறினார். 

Edappadi Palaniswami said that the date of parliamentary elections will be announced in February KAK

எடப்பாடியின் பொங்கல் கொண்டாட்டம்

அதிமுக சார்பில் ஓமலூர் பகுதியில் பொங்கல் விழா நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்,

தைபிறந்தால் வழிபிறக்கும் என்பது போல் இந்தாண்டு நாட்டு மக்களுக்கு நல்ல வழி பிறக்கும். இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் நாட்டு மக்களுக்கு உணவளிப்பவர்கள் விசாய மக்களின் உன்னதமான நாள் தை திருநாள். நானும் ஒரு விவசாயி. எனது இல்ல நிகழ்ச்சியாக நான் பார்க்கிறேன். இன்று எனது குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடிவரும் வேளையில் உங்களுடன் நான் பொங்கல் கொண்டாடுகிறேன்.

Edappadi Palaniswami said that the date of parliamentary elections will be announced in February KAK

கொள்ளையடித்த பணம்- திணறும் உதயநிதி

இரண்டரை ஆண்டு திமுக  ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செய்தனர். மக்களுக்கு என்ன செய்தார்கள். கொள்ளை அடித்ததுதான் சாதனை. 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதி, சபரீசன் உள்ளனர் என்று அமைச்சரே கூறி உள்ளார். கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறை செல்ல உள்ளனர். அதிமுக ஆட்சியல் கடுமயான வறட்சி  நிலவியபோதும், புயல் பாதிப்பின் போது மக்களை பாதுகாத்தோம். இன்று மிக்ஜாம் புயலில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சியல் திட்டமிட்டு செயல்பட்டோம். குடிமராமத்து திட்டம் மூலம் நீர்நிலைகள் தூர்வாறி இலவசமாக வண்டல் மண் எடுத்துசெல்ல அனுமதித்தோம். 

Edappadi Palaniswami said that the date of parliamentary elections will be announced in February KAK

நீட் தேர்வு- அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை

இப்போது மண் அள்ள முடியுமா? அதிமுக ஆட்சியில் மேட்டூர் அணையில் நாள் ஒன்றுக்கு 5000 லாரிகளில் மண் அள்ளப்பட்டது.  அரசு பள்ளியில் படிக்கும் 3,80,000 மாணவர்களில் 2018ம் ஆண்டில் 3145 மருத்துவ இடங்களில் 9 பேர்தான் தேர்வானார்கள். என் சித்தனையில் உதித்த 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொண்டுவந்து, இதுவரை 2,160 பேர் மருத்துவர்கள் ஆகி உள்ளனர். இவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் இந்த விடியா அரசின் சாதனை. 

Edappadi Palaniswami said that the date of parliamentary elections will be announced in February KAK

ஒரே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் விடியா அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும். விடியா அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஸ்டாலின் தமிழக முதல்வராக இருக்கலாம்.ஆனால் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதியில் 10 தொகுதி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம். எனவே நமது கழகத்தினர் எப்போதும் தயாராக இருந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

'அண்ணாமலை தான் முதலமைச்சர்' நடிகர் ரஜினி சொன்ன சீக்ரெட்டை உடைத்த குருமூர்த்தி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios