ADMK vs BJP : அதிமுக- பாஜக இடையே எந்த தொடர்பும் இல்லை.. அடித்துக் கூறும் எடப்பாடி பழனிசாமி

 முன்பு கலைஞர் முதலமைச்சர், பிறகு ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதியை முதலமைச்சராக்க போகிறார்கள். இது நடக்காது. திமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு வாய்ப்பில்லை. இதுதான் குடும்ப ஆட்சி‌ என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். 
 

Edappadi Palaniswami has said that there is no connection between AIADMK and BJP KAK

அதிமுக ஆட்சி கால திட்டங்கள்

தர்மபுரி அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசியவர், அதிமுக என்பது கழகம் ஒரு  குடும்பம் என்பதற்கு இதுவே சான்று. இது அதிமுகவில் மட்டுமே நடைபெறும்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர்.

ஆனால் இந்த திமுக அரசு இந்த திட்டத்தை  நிறுத்தி விட்டது. இதே போல கருவுற்ற பெண்களுகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம், ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக், வேலைக்கு செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கியது. ஆனால் தற்போது அனைத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டார்கள்.

Edappadi Palaniswami has said that there is no connection between AIADMK and BJP KAK

மக்களை ஏமாற்றிய திமுக அரசு

தைப் பொங்கலுக்கு ஏழைகள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2500 பணத்துடன், பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் திமுகவில் ஒழுகும் வெல்லத்தை கொடுத்தார்கள். பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்தவர்கள் தான் திமுக.  திமுக தேர்தல் நேரத்தில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. இதில்  100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பச்சை பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாக சேரவில்லை.

Edappadi Palaniswami has said that there is no connection between AIADMK and BJP KAK
பாஜக- அதிமுக தொடர்பு இல்லை

திமுக ஆட்சியானது குடும்ப ஆட்சி,  முன்பு கலைஞர் முதலமைச்சர், பிறகு ஸ்டாலின் வந்தார். தற்போது உதயநிதியை முதலமைச்சராக்க போகிறார்கள். இது நடக்காது. திமுகவில் முன்னாள் அமைச்சர்கள், முன்னோடிகளுக்கு வாய்ப்பில்லை. இதுதான் குடும்ப ஆட்சி‌. அடுத்த தேர்தல் எப்பொழுது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்தது பொறுத்துக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள். அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும்‌ இல்லை. ஆனால் திமுக தலைவர் தவறான பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை திமுக ஏமாற்றி வாங்கி வந்தது. தற்போது நாம் அதை வாங்கி விடுவோம் என்ற அச்சம் திமுகவினருக்கு வந்துவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

மூளையில் கட்டி.. தவிக்கும் செந்தில் பாலாஜி.! ஜாமின் கிடைக்குமா.? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios