Asianet News TamilAsianet News Tamil

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு திடீர் அழைப்பு விடுத்த இபிஎஸ்..! என்ன காரணம் தெரியுமா.?

அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்களுடன்  எடப்பாடி பழனிச்சாமி வரும் 4 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார் .

Edappadi Palaniswami has called a meeting of district secretaries to discuss the AIADMK state conference
Author
First Published Jul 27, 2023, 12:35 PM IST

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேல் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரத் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றத் பொதுச்செயலாளாரக அங்கீகரித்தது. இதனையடுத்து சோர்ந்து நிலையில் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அதிமுக மாநில மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டுமென பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  

Edappadi Palaniswami has called a meeting of district secretaries to discuss the AIADMK state conference

அதிமுக மாநில மாநாடு

மேலும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க, வரவேற்பு குழு, தீர்மானக்குழு, விளம்பரக்குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அந்த மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  மாநாட்டிற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வது, மாநாடு தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள பாடல் வெளியீடு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. இது தவிர்த்து நாடாளுமன்ற தேர்தல், பூத் கமிட்டி தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

கொடநாடு பங்களாவில் புகுந்த அரக்கர் கூட்டம்.! கொலை வழக்கு என்ன ஆச்சு.? இபிஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்
 

Follow Us:
Download App:
  • android
  • ios