ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திவிட்டு, மத்திய அரசின் காலில் விழுந்து முதல்வர் எதற்காக கெஞ்ச வேண்டும்-இபிஎஸ்

 உக்ரைன், காசா, மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின், தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

Edappadi Palaniswami demands that the Tamil Nadu government pay the fine to protect the livelihood of the fishermen KAK

தமிழக மீனவர்கள் கைது

தமிழக மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடந்த மாதம் 22-ந்தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும்,

அவர்களுக்கு  2 கோடியே 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகத்தின் பொம்மை முதல்வர் @mkstalin கடிதம் எழுதியிருக்கிறாராம். அபராதம் மிகவும் அதிகமானது, மீனவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

Edappadi Palaniswami demands that the Tamil Nadu government pay the fine to protect the livelihood of the fishermen KAK

கெஞ்சுவது ஏன்.?

உண்மையில் தமிழக மீனவர்கள் மீது இந்த விடியா திராவக மாடல் அரசின் முதல்வருக்கு அக்கறை இருந்திருந்தால் அபாரதத் தொகையை செலுத்தி மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி விசை படகுகளை மீட்டு தர வேண்டியதுதானே?  ஒன்றிய அரசு என்று கொச்சைப்படுத்திய மத்திய அரசின் காலில் பொம்மை முதல்வர் எதற்காக விழுந்து கெஞ்ச வேண்டும். உக்ரைன், காசா, மணிப்பூர் நிகழ்வுக்கெல்லாம் அதிகாரமே இல்லாமல் பொங்கி நாடகமாடிய ஸ்டாலின்,

தமிழக மீனவர்கள் செலுத்த வேண்டிய அபராதத்தொகையை செலுத்த முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அபராதத்தொகையை செலுத்தும்படி வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அதிமுக கட்சி பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios