அச்சச்சோ.! அதிமுகவில் 15 பேர் நீக்கம்.. எடப்பாடி அதிரடி முடிவு - யார் யார் தெரியுமா ?
எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவில் இருந்து 15 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்து ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார்.
இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தார்கள். அதேபோல அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இன்று ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிசந்திரன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, கிருஷ்ணமுரளி மற்றும் விஎஸ் சேதுராமன் ஆகிய 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
அதேபோல அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி 15 பேரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கைகளுக்கும் , குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் , கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் , அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மேற்கொண்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பின்வருமாறு, திரு . கு.ப. கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் திரு . C. ராஜேந்திரன் , Ex . M.L.A. , ( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) திரு . K.S. சீனிவாசன் , Ex . M.L : A . , ( கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ) திருமதி ஆர் . ராஜலட்சுமி , Ex . M.L.A. , ( கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக இளைஞர் பாசறை , இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ) திரு . S.M.K. முகம்மதுஅலி ஜின்னா , ( கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் ) திரு . M. பாரதியார்.
மேலும் செய்திகளுக்கு..எடப்பாடிக்கு பெரிய சிக்கல்.. உச்சநீதிமன்றத்தில் ஊழல் வழக்கு - அதிமுகவில் பரபரப்பு
( கழக விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் ) திரு . P.S. சிவா , ( கழக எம்.ஜி.ஆர் . இளைஞர் அணி துணைச் செயலாளர் ) திரு . ஆம்னி பஸ் அண்ணாதுரை , ( கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர் ) திரு . M.R. ராஜ்மோகன் , ( திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் ) திரு . C. ராமசந்திரன் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைச் செயலாளர் ), திரு . மணவை J. ஸ்ரீதரன் ராவ் , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு திருச்சி மண்டல துணைத் தலைவர் ) திருமதி T. சுஜைனி ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல இணைச் செயலாளர் ) திரு . R. விஜய் பாரத்.
( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) திருமதி V. மோகனப்பிரியா , ( கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சென்னை மண்டல துணைச் செயலாளர் ) திரு . G. மோகன் , ( கழக அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவுப் பொருளாளர் ) ஆகியோர் , இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டு கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !