விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.. எடப்பாடி அடுத்த முதல்வர் ஆவார் - ஆருடம் சொன்ன தமிழ் மகன் உசைன்
எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும். அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடியா அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீண்டும் அமைந்திடவும் இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தர பொதுச் செயலாளர் ஆகவும் தர்காவில் துவா மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசைன் கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அதிமுக என்ற இயக்கத்தை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிற தமிழக முன்னாள் முதல்வர் மீண்டும் முதல்வராக வேண்டுமென்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் நல்லாட்சியை தர வேண்டும் என்று கழகத்தினுடைய இடைக்கால பொதுச் செயலாளர் நிரந்தரப் பொது செயலாளராக வேண்டும்.
இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!
இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்திட வேண்டும் என்பதற்காகவும் தமிழகம் முழுவதும் 75 தர்காக்களில் துவா செய்து சிறப்பு பிரார்த்தனை செய்தும் எனது ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். இறைவனிடத்திலே நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள் இந்த துவா மூலம் சிறப்பு பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளோம்.
எங்கள் பிரார்த்தனை நோக்கமெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும். அந்த சட்டமன்றத் தேர்தல் மூலமாக விடியா அரசை வீட்டு அனுப்ப வேண்டும். மக்களுடைய செல்வாக்குடன் நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எடப்பாடி ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழகத்தை ஆள வேண்டும். நல்லாட்சி தர வேண்டும், துவா செய்கிறோம்.
இந்தத் துவாவை ஏற்றுக் கொண்டு எல்லோரும் மன்றாடுவோம் வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நாட்டு மக்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் என்ற அய்யாதுரை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று மக்கள் தயாராக உள்ளார்கள்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?