Asianet News TamilAsianet News Tamil

சபாநாயகரை நாளை மீண்டும் சந்திக்கிறது ஈபிஎஸ் தரப்பு... அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின் முடிவு!!

சபாநாயகரை நாளை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    

edapadi palanisamy team meets speaker again tomorrow and speaks about deputy leader of opposition
Author
First Published Jan 9, 2023, 11:59 PM IST

சபாநாயகரை நாளை மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இதில் அதிமுக-வின் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில் உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தபட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாற்றிலேயே இல்லாத சம்பவத்தை ஸ்டாலின் செய்துள்ளார்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!

மேலும் ஆளுநர் உரை குறித்து ஊடகங்களில் எப்படி கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறித்து சபாநாயகரிடம் முறையிட முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இந்த ஆட்சியில் தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்... சசிகலா அதிரடி கருத்து!!

மேலும் அந்த இருக்கையை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓதுக்குவது குறித்து சபாநாயகரை சந்தித்து பேச உள்ளதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9.15 மணியளவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios