இந்த ஆட்சியில் தான் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்... சசிகலா அதிரடி கருத்து!!

அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் தான் மக்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என சசிகலா தெரிவித்துள்ளார். 

people can be safe only in admk rule says sasikala

அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் தான் மக்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும் என சசிகலா தெரிவித்துள்ளார். முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் சொத்து வரி மூன்று முதல் நான்கு மடங்காக உயர்ந்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கடந்த 20 மாதங்களாக வரி என்ற பெயரில் வாங்குகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!

பெண்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் தான் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் இப்பொழுது அந்த மாதிரியான நிலைமை தமிழகத்தில் இல்லை, அதனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் வந்தால் தான் மக்கள் அனைவரும் நன்றாக இருக்க முடியும். ஏழை மக்களும் வாழ முடியும்.

இதையும் படிங்க: ஜன.20 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்... அறிவித்தார் கே.பாலகிருஷ்ணன்!!

நாம் வலிமையோடு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் குறைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும். எனது அருமை உடன்பிறப்புகளே நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களுடனே இருக்கிறேன், உறுதுணையாக இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கிறேன். ஆர்வத்துடன் கழக பணியாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios