ஜன.20 அன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்... அறிவித்தார் கே.பாலகிருஷ்ணன்!!

தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து வரும் ஜன.20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

we will besiege the raj bhavan and hold a protest on jan 20th says k balakrishnan

தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து வரும் ஜன.20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல மாதமாகவே தமிழக மக்களின் உணர்வுக்கு விரோதமாகவும், கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசன சட்டத்துக்கு எதிராகவும் தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். நாட்டின் பாரம்பரியத்துக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தொண்டர் போல் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

இதையும் படிங்க: அவை நாகரிகரீகம் இல்லாத இப்படி ஒரு ஆளுநரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை... ராமதாஸ் விளாசல்!!

இன்றைய தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கிய போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தன. மாநில அரசு ஏற்கனவே வழங்கிய உரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் பேரவையில் அதை முழுமையாக படிக்காமல் தவிர்த்திருக்கிறார். கவர்னரின் இந்த செயல் அரசியல் சாசனத்துக்கு, கூட்டாட்சி தத்துவத்துக்கு, அவை மரபுக்கு எதிரானது. ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்க வேண்டும்.. சீமான் ஆவேசம்!

அரசியல் சாசனத்தை மட்டுமல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயலாகும். இனியும் தமிழக ஆளுநராக ரவி நீடிக்கக்கூடாது. அவரது செயல்பாடுகளை கண்டித்து வருகிற ஜன.20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். மற்றக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்போம். மத்திய அரசு, அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios