Asianet News TamilAsianet News Tamil

அவை நாகரிகரீகம் இல்லாத இப்படி ஒரு ஆளுநரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை... ராமதாஸ் விளாசல்!!

அவை நாகரிகத்தை மதிக்காத இப்படி ஒரு ஆளுநரை தமிழ்நாடு இதுவரை பார்த்தது இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

tamilnadu has never seen such a uncivilized governor says ramadoss
Author
First Published Jan 9, 2023, 7:58 PM IST

அவை நாகரிகத்தை மதிக்காத இப்படி ஒரு ஆளுநரை தமிழ்நாடு இதுவரை பார்த்தது இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு எங்கள் நாடு என காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

மேலும் ஆளுநர் உரையை புறக்கணித்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே ஆளுநர் திராவிட நாடு, திராவிட மாடல், பெரியார், கலைஞர், அண்ணா உள்ளிட்ட பகுதி அடங்கிய பக்கத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குப் பேசக் கொடுத்த உரையே அவைக் குறிப்பில் இடம்பெறத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைக் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது பாதியிலேயே சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: கொடநாடு சர்ச்சை முதல் ஆளுநரே வெளியேறு வரை.. சட்டப்பேரவையில் நடந்த தரமான 10 சம்பவங்கள் இதோ!!

இந்த சம்பாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து ஆளுநரில் செயலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுநரை  தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios