Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் சுவாமி தரிசனம்.. என்ன காரணம் தெரியுமா?

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தது முக்கிய வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Edapadi palanisamy suddenly visited in tirupati temple
Author
First Published Sep 10, 2022, 12:38 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். 

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- இபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.. தலையில் அடித்துக் கதறும் பெங்களூரு புகழேந்தி.

Edapadi palanisamy suddenly visited in tirupati temple

இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதி அமர்வு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும். தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல், அதிமுக தலைமை அலுவலக சாவி இபிஎஸ் வசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தடுத்து தீர்ப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. 

Edapadi palanisamy suddenly visited in tirupati temple

இந்நிலையில், அதிமுக அலுவலக சாவி இபிஎஸ்யிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்தும், உயர்நீதிமன்றம் நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பை எதிர்த்தும் ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி கார் மூலம் நேற்று திருப்பதி சென்றார். இதனையடுத்து இன்று காலை 6 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தது முக்கிய வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க;-  ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம்.!வாய் நீளம் காட்டிய திமுக...தொடரும் மாணவிகளின் தற்கொலை - இபிஎஸ் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios