பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் திரௌபதி என ராமதாஸ் கூறியுள்ளார். 

வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வந்தது. 

இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக வளாகத்தில் திரௌபதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது குடும்பத்துடன் பார்வையிட்டார். பார்த்தது மட்டும் அல்லாமல் தனது கருத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த மனைவியை கொன்று டாக்டர் தற்கொலை... கள்ளக்காதலியும் எடுத்த விபரீத முடிவு..!

அதில், பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்கு தேவையான பல செய்திகளைச் சொல்லும் படம். பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் திரௌபதி என்று தெரிவித்துள்ளார். முன்னதாக திரௌபதி படத்தை பார்த்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் ஹெச். ராஜாவும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளுடன் சேர்ந்து கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.