முஸ்லிம்களிடம் விளையாடுவது போல் தலித்களிடம் விளையாடாதீர்கள்..! எச்.ராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்
சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் எச். ராஜாவுக்கு நான் தீய சக்தியாகவே தெரிவேன், மத்தியில் ஆட்சியில் இருந்தால் கட்சியை தடை செய்துவிட முடியுமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எச்.ராஜாவிற்கு சவால் விடுத்துள்ளார்
விடுதலை சிறுத்தை கட்சிக்கு தடை
தமிழீழ விடுதலைக்காக 12 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு வீரச்சாவடைந்த கேணல் திலீபன் நினைவு நாள் சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், ஈழம் இல்லையேல் தமிழர்களுக்கு விடிவு இல்லை என முழங்கியவர் திலீபன், ராஜிவ் - ஜெயரத்தினே ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும் வடக்கு கிழக்கு மாகாணம் தனித்தனியே பிரிக்கப்பட வேண்டும் என்பதே தற்போது விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார். பிராமண இந்து எச்.ராஜா கூறுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என கூறுகிறார். எங்கு சென்றாலும் விடுதலை சிறுத்தைகள் தான் தெரியுது.
சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லை- மு.க.ஸ்டாலின்
தலித்களிடம் விளையாட வேண்டாம்
கனவிலும் அவருக்கு சிறுத்தை சொப்பனம் தான். எங்கு சென்று எச்.ராஜா பேட்டி கொடுத்தாலும் தீய சக்தி திருமாவளவன் என கூறுகிறார். அருமையான சான்றிதழ், நீ தீய சக்தி என்று சொன்னால் தான் சரியாக இருக்கிறேன் என பொருள். நீ என்னை நல்ல சக்தி என்று சொல்லிவிட்டால் நான் சனதான சங்கியாக மாறிவிட்டேன் என்று பொருள். விடுதலை சிறுத்தை கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என கூறுகிறார். டெல்லியில் ஆட்சியில் இருந்தால் தடை விதித்து விட முடியுமா,? ஒன்று மட்டும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் முஸ்லிம்களிடம் விளையாடுவது போல் தலித்களிடம் விளையாட முடியாது. அதற்காக முஸ்லிம்களை குறைத்து நினைப்பதாக நினைக்க வேண்டாம். அது சங்கிகளில் சேட்டை. சங்களின் திட்டம். அம்பேத்கரை பகைத்து கொள்ள கூடாது. தலித்களை பகைக்க கூடாது. வெளிப்படையாக அரசியல் அமைப்பு சட்டத்தை பகைத்து கொள்ள கூடாது. ஏனென்றால் 35 கோடிக்கும் அதிகமாக உள்ள மக்கள். இரண்டாவது அம்பேத்கரை குல தெயவதாக 365 நாளும் கொண்டாடுவதாக கூறினார்.
எச்.ராஜாவை பொருட்படுத்துவதில்லை
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எச்.ராஜாவை நான் பொருட்படுத்துவதே இல்லை. ஏழை எளிய மக்களின் பார்வைக்கு நான் தூய சக்தியாகத்தான் தெரிவேன் அதேபோல் சனாதன பிராமண இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜாவுக்கு நான் தீய சக்தியாகவே தெரிவேன் என தெரிவித்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யபட வேண்டும்.பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் பின்னணியில் ஆர்எஸ்எஸ் பின்னணி உடைய நபர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் தான் இலக்கு
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதாகவும். ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்நோக்கத்திற்காக மட்டுமே 50 இடங்களில் பேரணி நடத்தப்படுகிறது என்றும், தமிழகம் முழுவதும் மற்றும் மத ரீதியிலான பிரச்சனையை ஏற்படுத்துவதற்காகவே 2024 தேர்தலை முன்னிறுத்தி இந்த பேரணியை ஆர்எஸ்எஸ் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்..! தமிழகம் முழுவதும் 14 பேர் கைது- டிஜிபி