பெட்ரோல் குண்டு எங்கு எப்போது வீசப்படுமோ அச்சத்தில் பொதுமக்கள்..!அமளிக்காடாக காட்சி அளிக்கும் தமிழகம்- ஓபிஎஸ்

தமிழகத்தில் நடைபெற்றுவரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க திமுக அரசு வைத்துள்ளதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

OPS has blamed the law and order situation in Tamil Nadu due to the petrol bomb blast incident

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக, 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு; 2006 ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத வன்முறை, 2008 ஆம் ஆண்டு சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டபோது அதனை வேடிக்கை பார்த்தது; 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்றது;

OPS has blamed the law and order situation in Tamil Nadu due to the petrol bomb blast incident

பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது

2010 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. ரவுடி கும்பல் வழக்கறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியது என பலவற்றை எடுத்துச் சொல்லலாம்.இந்த வரிசையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவங்கிய இந்த பெட்ரோல் குண்டு வீச்சு, ஈரோடு, இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளது.  இதில் அப்பாவி மக்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்றால், இதற்கு தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை திசை திருப்பும் திருமா, சீமான்? விசிகவை தடை செய்ய வேண்டும்- எச்.ராஜா ஆவேசம்

OPS has blamed the law and order situation in Tamil Nadu due to the petrol bomb blast incident

பொதுமக்கள் நடமாடமுடியாத நிலை

இதனை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. எங்கு, எப்போது பெட்ரோல் குண்டு வீசப்படுமோ என்று மக்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதிமுக  ஆட்சிக் காலத்திலே அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழகம் இன்று அமளிக்காடாக காட்சி அளிக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும். உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த நிலை தொடர்ந்தால், சட்டம்-ஒழுங்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியும் சீரழியும் நிலைமை உருவாகும்.

OPS has blamed the law and order situation in Tamil Nadu due to the petrol bomb blast incident

இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் காரணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததுதான் என்ற எண்ணம் தற்போது பொதுமக்களிடையே மேலோங்கி உள்ளது. பொது அமைதிக்கு குந்தகப் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

எடப்பாடியை நினைத்து அழுவதா..? சிரிப்பதா? என தெரியவில்லை..! கிண்டலடிக்கும் துரைமுருகன்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios