எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது.

மதுரை, பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இப்போது நடந்து வருகிறது. இம்மாநாட்டில் விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் கைகொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேடையில் பேசிய விஜய், ‘‘பெண்குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம் இளைஞர்கள், உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் இன்னும் யாருக்கெல்லாம் அரசின் தனிக்கவனம் தேவையோ அவர்கள் எல்லோருக்குமான அரசை அமைப்போம்.சினிமாவுலயும், அரசியல்லயும் நமக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது யார்னா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான்...

ஆனால், அவர் கூட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனா அவர மாதிரியே குணம் கொண்ட என்னோட அண்ணன், புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்களோட பழகுறதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைச்சது... அவரும் இந்த மதுரை மண்ணை சேர்ந்தவருதான். அவர மறக்க முடியுமா? நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம்.

என்கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது. மாநில உரிமை, பெண்ணுரிமை, சமூக நீதி, சமநீதி, மதச்சார்பின்மைக்காக உண்மையாக ஒலிக்குற குரல், தவெகவின் குரல். இன்னும் எத்தனை எத்தனை கூக்குரல்கள் வந்தாலும் ஓங்கி ஒலிக்குமே தவிர ஒரு நாளும் ஓயவே ஓயாது. நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான்... ஒரே அரசியல் எதிரி திமுகதான். 

எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக இன்று எப்படி இருக்கிறது? அதிமுக கட்சியை யார் கட்டிக்காப்பது? பொருந்தாக் கூட்டணியாக அதிமுக-பாஜக கூட்டணி உள்ளது. நம்மை நம்பி வருபவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உறுதியாக பங்களிப்பு செய்யப்படும். 2026-ல் இருவருக்கு மத்தியில் தான் போட்டி. ஒன்று தவெக மற்றொன்று திமுக’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி, விஜயுடன் கூட்டணிக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா? அண்நக் கட்சி யார் கையில் இருக்கிறது தெரியுமா? எனப்பேசியதன் மூலம் அதிமுகவுடன்ன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தின் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.