'இந்த அடக்குமுறையில் இருந்து இன்னும் வலிமையாக திமுக வெளியே வரும்’ - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தங்களிடம் உள்ள துறைகளை ஏவி ஏதேனும் செய்துவிட முடியுமா என மத்திய அரசு முயற்சித்து பார்க்கிறது. நாங்கள் யார் என்பதை முதல்வர் அவர்களுக்கு கற்று கொடுப்பார் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

dmk will come back very strongly minister trb raja comments about ed raid against minister senthil balaji

கோவை பீளமேடு பகுதியில் உள்ள டைடல் பார்க் அலுவலகத்தில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “டைடல் பார்க் மற்றும் எல்கார்ட் ஆகிய இடங்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்துள்ளோம். கோவையில் அதிகமான வளர்ச்சி கொண்டு வருவதற்கான, புதிய திட்டங்களுக்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. நிலம் வாங்கவும், புதிய கட்டிடங்களை கொண்டு வருவதற்கான வேலைகளையும் முதல்வர் அனுமதியுடன் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

லூலு மால் அமைக்க செங்கல் கூட கொண்டு வர முடியாது என அண்ணாமலை பேசியிருந்த நிலையில் இன்று லூலுமால் திறக்கபடுவது குறித்த கேள்விக்கு, ”லூலூ மால் கட்டி முடித்து  இருக்கின்றனர். இன்று தொடக்கப் போகிறோம் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜகவும், ஒன்றிய அரசும் எதுவும் செய்யாமல், சிறுபிள்ளைத்தனமான வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.  ஆக்கப்பூர்வமான வேலைகளை அவர்கள் தமிழகத்திற்கு செய்ய வேண்டும்” எனப் பதிலளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, ”இதை விட பெரிய முதலைகளை எல்லாம் சந்தித்த இயக்கம் திமுக. இந்த அடக்குமுறையில் இருந்தும் இன்னும் வலிமையாக திமுக வெளியே வரும். நிச்சயமாக எங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து செந்தில் பாலாஜி வெளியே வருவார். திமுகவை அடக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் வேகமாக வெளியே வரும் இயக்கம் திமுக. கலைஞரின் வளர்ப்பு நாங்கள். தளபதியின் தம்பிகள் நாங்கள். இதற்கெல்லாம் பயந்து போகும் ஆட்கள் கிடையாது. 

“செந்தில் பாலாஜி கைது” தேர்தல் நெருங்கும்போது இன்னும் பல வேலைகளை செய்வார்கள் - சீமான் கருத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது நிறைய விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதெல்லாம் சின்ன மேட்டர். நிறைய பார்த்து விட்டோம். செந்தில் பாலாஜி சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கிறார். பதவியில் இருப்பதால் ஆடுகிறார்கள். திமுக மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. முதல்வருக்கு நற்பெயர் உருவாகி இருக்கிறது, அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார். 

செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - நாராயணன் திருப்பதி கருத்து

வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளைக் கொண்டு சேர்க்கிறார். மத்திய அரசுக்கு திராவிட மாடல அரசு ஒரு சிம்ம சொற்பமாக இருக்கிறது. முதலமைச்சர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அதைக் கண்டு பயப்பட்டு, அவர்களிடம் இருக்கும் துறைகளை ஏவி ஏதாவது செய்ய முடியுமா? என பார்க்கின்றனர். அவர்களுக்கு திமுகவை பற்றி தெரியவில்லை. நாங்கள் யார் என்பதை முதல்வர் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்” எனப் பதிலளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios